Clicky

தோற்றம் 30 MAR 1956
மறைவு 24 MAR 2021
அமரர் கனகசபாபதி தவேந்திரன்
வயது 64
அமரர் கனகசபாபதி தவேந்திரன் 1956 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நண்பனே, அன்பான தவே, எங்கு சென்றாய்? ஏன் சென்றாய்? உன் அண்ணன் தாமஸ் உடன் படித்து, விளையாடியும் உன்னுடன் தான் நண்பனானேன். நட்ப்புக்கு இலக்கணமாக இருந்தவனே, நம்பிக்கைத் துரோகம் உன்னிடம் நான் கண்டதில்லை. எத்தனை நண்பர்களைக் கொண்டிருந்தாய். எவருமே உன்னை குறைத்து மதிப்பிடவில்லை, முறைத்து உன்னைப் பகைத்தவனும் இல்லை. எல்லோரிடமும், எல்லா நேரமும், எல்லாவிதத்திலும் ஒத்துப்போகும் ஓரே ஒரு ஜீவன் நீ மட்டுமே. உனக்கு ஆண்டவனின் பக்கத்தில் ஓர் இடம் நிச்சயம் உண்டு. உன் அருமைத் தாயோடு ஒன்றித்திரு. உன் சகோதரர், உறவினருக்கு என் அனுதாபங்கள் தவிர வேறு என்ன சொல்ல முடியும். உன்னைப் போல் ஒருவன் இனிமேல்த் தான் பிறக்கவேண்டும். ஆயிரத்தில் ஒருவனல்ல, நீ லட்ச்சத்தில் ஒருவன். நண்பனே, என்றும் உன் நினைவு என் நெஞ்சில் இருக்கும்.
Write Tribute