திதி: 26-03-2024
யாழ். மானிப்பாய் சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகசபை குட்டித்தம்பி பேரம்பலம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று அகன்றோடி மறைந்தாலும்
உங்கள் நினைவு என்றும் மறக்காது
ஒவ்வொறு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை நாம் உணருகிறோம்!.
உங்கள் நினைவுகள் எங்களைத் தாலாட்ட
மீண்டும் மீண்டும் தேடுகின்றோம்
ஏங்கித் தவிக்கின்றோம் உமை நினைத்து
உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
அகலாது உம் பிரிவு மறக்கமுடியுமோ?
எம்மையெல்லாம் ஆழாத்துயரத்தில்
ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் சென்றதை?..!
எம் அன்புத்தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!