Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 FEB 1945
இறப்பு 20 OCT 2021
அமரர் கனகரட்னம் லோகேஸ்வரன் (மாத்தையா)
முன்னாள் உரிமையாளர்- ராஜன் ஸ்ரோர்ஸ் காலி
வயது 76
அமரர் கனகரட்னம் லோகேஸ்வரன் 1945 - 2021 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவில், கொட்டடி, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகரட்னம் லோகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 09-10-2022

ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்...

எத்தனை இன்னல்கள் வந்தாலும்
அப்பா நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே... 

நீங்கள் இல்லா வாழ்வு
நிலவு இல்லா வானம்
உங்கள் நினைவுகளை சுமந்து
நிழலுக்கு மலர் தூவி வணங்குகிறோம்
 கள்ளமில்லா உங்கள் உருவை
எங்கு காண்போம்?

கனிவான வார்த்தைகளை
எங்கு கேட்போம்?
உங்கள் உடல் எம்மை விட்டு போனது
உங்கள் உயிர் எம்மோடு வாழ்கிறது
 நீங்கா நினைவுகளுடன்
என்றும் எம் மனதில் வாழ்வீர்கள்!

தகவல்: குடும்பத்தினர்

Photos