4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கனகர் பாலசுப்பிரமணியம்
கல்லுண்டாய் , ஆனையிறவு உப்புக்கூட்டுத்தாபன ஊழியர்(இயந்திர வல்லுனர்)
வயது 81
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திதி:24/02/2026
யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகர் பாலசுப்பிரமணியம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் நான்கு உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உம் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
பார் போற்ற எமை வளர்த்தீர்கள்
கல்வியைக் கருத்தாய் கற்று உயர்ந்திட
கண்டிப்புடன் நற்கல்வி அளித்தீர்கள்
கண்ணினின்று நீர் வழிந்தோடி எம்மை
கலங்க வைக்கின்றதே அப்பா
காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்
வையகத்தில் நாம் வாழும் காலம் வரை
நெஞ்சத்தில் உங்கள் நினைவு நிழலாடும்
உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்