2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கனகர் பாலசுப்பிரமணியம்
கல்லுண்டாய் , ஆனையிறவு உப்புக்கூட்டுத்தாபன ஊழியர்(இயந்திர வல்லுனர்)
வயது 81
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகர் பாலசுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 17-03-2024
ஆண்டிரண்டு மறைந்து விட்டது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா
என ஏங்கித் தவிக்கிறோம் அப்பா...
ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்
உங்களது ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்