

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கமலக்கண்ணன் அரசரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03/04/2023.
பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை.
இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை.
நேசத்தினால் வரும்நினைவுகள் தொல்லை.
மறதியைப்போல் ஒரு மாமருந்து இல்லை.
அன்புத்தம்பி கமலக்கண்ணா!
ஊரைவிட்டு நீ புறப்பட்ட நினைவுகளை
இன்றளவும் அசைபோட்டு பாக்கின்றோம்.
உனது அந்த உருவம் எம் கண்முன்னே நிற்கிறது.
வருவேன் என்ற வார்த்தையை நெஞ்சில் நிறுத்தி
வழிமேல் விழிவைத்து காத்திருந்த எங்களைத்
துடிக்க வைத்தது உன் பிரிவுச்சேதி.
அந்தக்காட்சி கண்இமைக்கும் கணம்தான்
உன்னை இழந்ததை மனம் ஏற்கவில்லை கண்ணா
எங்களை ஆசுவாசப்படுத்தவும் முடியாமல் தவிக்கின்றோம்.
மறதி என்ற மாமருந்துகூட எம்மை வஞ்சித்து விட்டது கண்ணா
வருவாய் என காத்திருக்கும் எங்களிடம்
உறவு சொல்லி ஒருவனாய் வந்துவிடு கண்ணா.
ஒம்சாந்தி!ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
உதவுவதற்கு முன்னிற்பவன், This is my personal experience Jeyananthasivam Sivanadian