1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கமலக்கண்ணன் அரசரத்தினம்
வயது 58

அமரர் கமலக்கண்ணன் அரசரத்தினம்
1961 -
2020
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
104
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கமலக்கண்ணன் அரசரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
உன் பிரிவு எம்மை உருக்குதைய்யா
கடல் சூழ்ந்த ஈழத்திருநாட்டின் கற்பகமே!
புலத்தில் புது நாற்றாய் பூத்துக் குலுங்கினாயே!
தாக்கும் வினை வந்ததின் காரணத்தைக் கூறிடுவாய்
உன் கதை கேட்கும் பொழுதெல்லாம்
கண்ணீர் ஆறாக பெருகுதையா!
காக்கும் கடவுளிடம் கையேந்தி நின்றோம்
பார்க்க எடுக்க உன் பக்கத்துணை யாருமின்றி
பரிதவித்துத் தான் சென்றீரோ?
ஆண்டு ஒன்று சென்றாலும்
மாண்ட உன் நினைவு மாறிடுமோ?
கண்ணுக்கு கண்ணான எம் சகோதரனின்
ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று
ஆண்டவரை வரம் வேண்டி நிற்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!
தகவல்:
குடும்பத்தினர்
Our Deepest condolences to your family members