Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 JAN 1967
இறப்பு 08 NOV 2020
அமரர் கலாமோகன் செல்லத்துரை 1967 - 2020 அல்லைப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, கொக்குவில் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கலாமோகன் செல்லத்துரை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி. 

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
நான்காண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா

பாசத்தின் முழு உருவம் என் அப்பா
பாதியிலே எம்மை விட்டு ஏன் போனீர்கள்?
என் அடுத்த பிறவியிலும்
அப்பாவாய் நீங்களே வரவேண்டும்

கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ! அப்பா
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!

எத்தனைதான் எமக்கு இருந்தாலும்
எம் உயிர் நீர் இல்லையே
ஏங்கித் தவிக்கின்றோம் !

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

என்றென்றும் உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
செல்வகுமாரி கலாமோகன் (மனைவி), பவித்ரா கலாமோகன் (மகள்),
அனுருத்ரன் (மகன்), அபிரதன் (மகன்) மற்றும் ஞானாம்பிகை செ. (மாமி)

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 10 Nov, 2020
நன்றி நவிலல் Mon, 07 Dec, 2020