Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 JAN 1967
இறப்பு 08 NOV 2020
அமரர் கலாமோகன் செல்லத்துரை 1967 - 2020 அல்லைப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, கொக்குவில் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கலாமோகன் செல்லத்துரை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

எங்கள் இதயத்தோட்டத்தில்
 ஓயாது பூக்கிறது சோகம்!
எந்நேரமும் தண்ணீர் பாய்ச்சுகின்றது
 எங்கள் இருவிழிகள்!

இதயத்தில் இரக்கம் கொண்டவரே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ

சோகம் தனிமையில் கூட வரும் ஆனால்
உண்மையான சந்தோஷம்
அன்பானவர்கள் இருக்கும்போது மட்டுமே வரும்
எனது வாழ்வில் ஒரு உதயம் பிறந்தது
அந்த உதயம் மறைந்து மூன்று வருடமாகியதே

வாழ்வியல் தத்துவம் நாங்கள்
அறியாது தவிக்கின்றோம்
பிறப்பும் இறப்பும் உலக
இயக்கத்தின் கட்டாயம்,
ஆனால் பாசமும் பந்தமும்
பிரிவில்லாத் தொடர் வலைகள்!

என்றென்றும் உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
செல்வகுமாரி கலாமோகன் (மனைவி), பவித்ரா கலாமோகன் (மகள்),
அனுருத்ரன் (மகன்), அபிரதன் (மகன்) மற்றும் ஞானாம்பிகை செ. (மாமி)

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 10 Nov, 2020
நன்றி நவிலல் Mon, 07 Dec, 2020