யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schaffhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கைலாயபிள்ளை சிவநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பானவரே!
ஆருயிரானவரே,
பண்பானவரே,
பாசத்திற்கே இலக்கணமானவரே!
எம்மை இங்கே
பரிதவிக்க விட்டுப் பறந்ததேன் அப்பா?
தாய்ப்பறவை போல
நீங்கள் எம்மை
உங்கள் உயிரினுள்
பொத்தி வைத்து காத்தீர்களே அப்பா!
எங்களை, உங்கள் பிள்ளைகளை,
நீங்கள் வழிநடத்தி,
அன்போடும் அக்கறையோடும் வளர்த்து,
எப்போதும் காத்து வந்தீர்கள்.
அதற்காக எங்கள் இதயங்கனிந்த நன்றிகள், அப்பா.
எப்பொழுதும் எங்களுக்காகவே
உழைத்தீர்கள்
உங்கள் வாழ்நாள் முழுவதும் எங்களுக்காகவே அர்ப்பணித்தீர்கள்
எங்களுக்காக அனைத்தையும் கொடுத்து
இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுப் போனதேன் அப்பா?
இன்று
நாங்கள் உங்களை இழந்து
திசை தெரியாமல் தவிக்கின்றோம்.
உங்கள் துணையை இழந்த
எங்கள் தாய்
மிகுந்த துயரத்தில்
ஆதரவின்றி நிற்கிறார்.
தக்க பதில் சொல்லுங்கள் அப்பா!
நொந்து மனம் வாடி
நிதம் எங்கள் உள்ளம்
வெந்து துடிக்கின்றது.
உங்கள் நினைவுகளோடு
ஒரு தடவை எங்கள் வாசலில்
வந்து செல்ல மாட்டீர்களா அப்பா?
புன்னகை அழகனே!
உங்கள் சிரிப்பொலியால்தானே
எங்கள் உலகம் ஒளிர்ந்தது.
சந்தோஷத்தை மட்டுமே
எங்களுக்கு பரிசளித்தவரே!
இன்று எங்களை
சஞ்சலத்தில் ஆழ்த்தியதேன் அப்பா?
எங்கள் வானில்
சூரியன் நீங்கள் தானே அப்பா!
எங்கள் இதயக் கோயிலின்
தெய்வமும் நீங்கள் தானே அப்பா!
உங்கள் விரல்கள் பிடித்து
நடந்து வந்த எங்கள் பாதங்களுக்கு
இனி வழி சொல்லுவார் யார் அப்பா?
நந்தவனமென
சந்தோஷ மலர்களை
எங்களுக்கு வழங்கியவரே!
இன்று
கண்ணீருடன்
இதயம் வலித்து
உங்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்.
எமதாருயிரே அப்பா!
உங்கள் ஆத்மா
சாந்தியடையட்டும்!
🙏🙏🙏
ஓம் சாந்தி!
ஓம் சாந்தி!
அன்புடன்,
உங்களை என்றும் நினைத்து ஏங்கும் மனைவி, மகள்கள், மற்றும் குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Vathanalogan family from Swiss.
அனைவரிடத்திலும் பேரன்போடும் பண்போடும் பழகி, உலகில் வலிமையானதும் நிலையானதும் அதுவொன்றே என வாழ்ந்து காட்டிய பண்பாளனே , ஆண்டொன்றல்ல உங்கள் நினைவுகள் என்றென்றும் எம்மோடு நிலைத்திருக்கும்!!...