
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schaffhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கைலாயப்பிள்ளை சிவநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அந்திமத்தின் பின்னும் கூடடையா
எந்தையின் நினைவுகள்..!
மறக்க முடியாமல் வலியுடன்
நினைவுகளைச் சுமக்கின்றோம்..
நிஜம் ஒரு நொடி வலி - ஆனால்
நினைவுகளே ஒவ்வொரு நொடியும் வலி..
உணர்வுகளை நினைவுகளாய்
சேமிக்கும் மனிதர்கள் நாம்..
உணர்வுகளும் குறைய போவதில்லை
நினைவுகளும் முடிய போவதில்லை..
அப்படியாகத்தான் எங்கள் நினைவின்
ஆழியில் நீந்தும் தந்தை என்னும் பேரன்புப்
பெட்டகத்தின் உள்ளுறையும் நேசத்தின் நினைவுகள்..
நானும் அக்காவும் மண் தொட்ட நாளிலிருந்து
நீங்கள் விண்தொட்ட நாள்வரை
பார்த்துப் பார்த்தே வளர்த்த
எம்
பாசத்தின் ஒளி விளக்கு..
எம் இன்பத்திலும் துன்பத்திலும்
தோள் கொடுக்கும் மாந்தருள் தெய்வம்
அன்பையும் பண்பையும்
அள்ளி
வழங்கிடும் எம் தாயுமானவரே..
எம் தாயின் கரம் பற்றிய நாளிலிருந்து
தாரத்தை தாயாகப் போற்றிய உத்தமரே
எம் பந்தத்தின் பரிபூரணத்தில் நாம் கரைவதா
தொலைவதா என்று புரியாத நிலை இன்று..
எப்படி மறப்போம் மீண்டும் மீண்டும்
நினைக்கத் தோன்றும் உங்கள் நினைவுகளை,
ஆண்டொன்றல்ல
காலங்கள் கடந்து போனாலும்
மறந்து போகாது
ஒரு கூட்டில் வாழ்ந்த காலப் பொழுதுகள்..
எங்குற்றீர் நீங்கள்? இனி எங்கு காண்போம் நாம்!
எம் நினைவிருக்கும் வரையில்
நினைவில் என்றும் நீங்களே !
என்றும் நீங்கா நினைவுகளுடன்
மனைவி,
மகள்கள்...
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Vathanalogan family from Swiss.
எங்கு கண்டாலும் ஓரு சின்ன சிறிப்பு தம்பி எப்பிடி இருக்கிறாய் எண்டு கேப்பார் schaffahause மாநிலத்தில் சிறந்த வர்த்தகறும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்