யாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்துரையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த யூடிட் விமலராணி அரியநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்களில் ஏன் நீர் அருவி
காயங்கள் நெஞ்சில் தானே
கண்கலங்காமல் பார்ப்பேன் என்று
கரம்பிடித்த போது வாக்குறுதி தந்தேன்
தந்த வாக்குறுதி தான்
நிறைவேறா நீறாயிற்று
என் அன்பே நின் (உன்) கண்ணியமான
ஆடை ஆலகாரமும்
கலகல என்ற சிறிப்பொலியும்
நீங்கா நிழலாய் நிற்கிறதே....
உன் உறக்கம் இல்லாமல்
தோலிலும், மடியிலும் பாசம் காட்டி
வளர்த்த உம் செல்வங்கள்
தொலைபேசியில் முழுமதி உன் முகத்தை
பதித்து வைத்து பார்த்துக் கொண்டிருகிறார்கள்....
இல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருபாய்
பிறர் பட்டிணி கிடக்கப் பொறுக்காமல்
தான தர்மங்கள் செய்வாய்
இப்போ அவ்வுறவுகள்
நித்தம் உன்கதை பேசிக் கொண்டிருக்கிறார்கள்...
மரணம் ஏன் இவ்வளவு கொடியது
இருப்பது இந்த சொற்ப வாழ்கைதானா
இரவுவொன்று இருந்தால்
பகலொன்று வரும்
பிறப்பொன்று இருந்தால்
இறப்பும் உண்டு
மீள்துயில் கொண்டிருக்கும் உங்களை
மீளாத் துயரில் இருக்கும் உம் உறவுகள்
மீண்டும் காண்பதற்கு ஆவலாயிருக்கிறோம்..
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல்...