Clicky

பிறப்பு 06 MAY 1979
இறப்பு 18 DEC 2018
அமரர் ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன்
வயது 39
அமரர் ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன் 1979 - 2018 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 06 JAN 2020 Canada

கண்ணா! கண்ணா!! கண்ணா!!! நீ எம்மைவிட்டுச் சென்று ஆண்டு ஒன்று ஆனதடா – ஆனால் நாம் அழுகின்ற கண்ணீர் ஓயுதில்லையாடா இன்றும் உன் நினைவால் நடைபிணமாய் நாமிங்கு அலைகின்றோமடா எம் குடும்பத்தில் கடைசியாய் வந்துதித்து முன் சென்று மறைந்திட்ட மாயந்தானென்ன ஒவ்வொன்றாய் எல்லாமே பார்த்துப்பார்து உனக்காக செய்து மகிழ்ந்தோமே எங்காவது நாம் பிழை விட்டோமாடா உன் பாசத்தை தொலைத்து விட்ட பாவிகளாய் அலைகின்றோமடா உன் பிரிவின் பின்…. எத்தனை சோதனை எத்தனை வேதனை எண்ணவே முடியுதில்லையடா சித்தி படும் துயரம் எண்ணிடலங்காது உன் உடன்பிறப்பின் பரிதவிப்போ… உன் உறவுகள் எல்லாமே உருக்குலைந்து போய்விட்டோமடா யார் கண் பட்டதுவோ ஆண்டவன் விதி இதுவோ வாழ வேண்டிய வயதினிலே உனை பறிகொடுத்து விட்டு இங்கு நாம் பரிதவிக்கிறோம் வண்ண முகத்தழகா வடிவழகா கண்ணா...என்றாலே... உம் உள்ளமெல்லாம் இனிக்குமடா உன் அன்பு மழையில் நாம் அன்று நனைந்த நாட்களை எண்ணுகின்றோம் சிரிக்க சிந்திக்க கதைகள் பேசி எம் சிந்தை கவர்ந்தவனே இன்னும் பல்லாண்டு எமக்கெல்லாம் துணையாக இருப்பாயென்றெண்ணி நாம் இறுமாப்படைந்திருந்தோமே உன்னை கொடிய காலனவன் நோய் வடிவில் கவர்ந்து செல்ல திசையறியாத் தோணி போல திகைத்து நாம் தவிக்கிறோமே கொடிய காலனிடமிருந்து உனைக் காப்பாற்ற போராடி தோற்றுப்போய் விட்டோமடா எம் உறவுகள் எல்லாம் உன்மீது அன்புமழை பொழிகையிலே நீ செல்லப்பிள்ளையாய் வலம்வந்து வாழ்ந்த வாழ்க்கையை எண்ணிப் பார்க்கின்றோம் எம் உடன்பிறப்பே ஏன் இந்த அவசரம் எதற்காக எம்மையெல்லாம் அழவைத்து எட்டி நடை வைத்தாயடா இதயமே நொருங்கி இன்றும் அழுகிறது எம் உயிருள்ளவரை உன் நினைவு எம் நெஞ்சைவிட்டு நீங்காதடா நிச்சயமாய் உனை சந்திப்போம் உன் தொப்புள் கொடி உறவுகள்