யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, லண்டன், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஆறு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள்
நினைவலைகள் ஜெயமோகன்!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
நீங்கள் பிரிந்து ஆறு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம் ஜெயமோகன்..!
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்
சிப்பிக்குள் முத்தாய் அன்னையின் கருவறையில்
இப்புவியில் உதித்த செல்கதிர் சுடரே
ஆண்டு 6 கடந்த பின்பும் ஓயவில்லை
நினைவலைகள்..!
கண் இமைக்கும் நேரத்தில் காலன்
உனை கவர்ந்த வேளை காவலனாய்
நாமில்லை கதி கலங்கி நிற்கின்றோம்!
அன்னை தந்தைக்கு ஆசைக்கோர் மகனாய்
அவதரித்த எம் அன்பு செல்லமே..!
இது என்ன விதியடா
வையகத்தில் வாழ ஆசைப்பட்ட
உன்னை காலன் பறித்தானோ..!
கண்ணா! கண்ணா!! கண்ணா!!! நீ எம்மைவிட்டுச் சென்று ஆண்டு ஒன்று ஆனதடா – ஆனால் நாம் அழுகின்ற கண்ணீர் ஓயுதில்லையாடா இன்றும் உன் நினைவால் நடைபிணமாய் நாமிங்கு அலைகின்றோமடா எம் குடும்பத்தில் கடைசியாய்...