Clicky

பிறப்பு 06 MAY 1979
இறப்பு 18 DEC 2018
அமரர் ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன்
வயது 39
அமரர் ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன் 1979 - 2018 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 16 JAN 2019 Canada

கண்ணாவின் அன்பு நண்பர்களுக்கு எம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவிக்கின்றோம் எம் ஆலமரம் சாய்ந்ததுவே நீ விழுதுகள் பரப்பி நிழலாயிருப்பாயென நாம் சகோதரர்கள் எண்ணியிருக்க எம்முயிர் தம்பியின் உயிர் பிரிந்ததுவே டிசம்பர் 17 இரவு 12:03 மணிக்கு இன்றோடு மாதமென்று முடியுதடா எத்தனை வருடங்கள் தான் முடிந்தாலும் நீ எங்களோடு என்றும் வாழ்வாயடா எம் அருமைக் கண்ணாவே! அலைகள் ஓய்ந்தது கரையைத் தொடுமுன்னே… எல்லாம் விதி என்று எவ்வளவுதான் மனதை ஆறுதல் படுத்தினாலும் உன்னை இழந்து விட்டோம் என்று ஒரு கணம் நினைத்து விட்டால் கண்கள் குழமாகின்றது மனங்கள் தடுமாறுகின்றது வாழ்கை வலியாகிறது உன் சிரித்த முகத்தால் அனைவரையும் கவர்ந்து அத்தனை உள்ளங்களிலும் அன்பாக இடம்பிடித்து இன்றோ அனைவரையும் ஏங்க வைத்து எங்கே சென்று விட்டாய் எம் இனியவனே! எம் எல்லோர்க்கும் இளையவனாய் பிறந்து அறிவு ஆற்றலினால் உயர்;ந்து நின்று எம் முன்னே சென்று விட்டாயடா கண்ணா நீ எம்மை விட்டு பிரிந்தாலும் நீ எங்கு தான் சென்றாலும் நீ எங்களோடு எங்களுக்குள் உன் சிரித்த முகத்துடன் வாழ்கின்றாய் எம்மைச் சுற்றிச்சுற்றி வலம் வருகின்றாய். நீங்கா நினைவுகளுடன் உன் தொப்புள்கொடி உறவுகள்