Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 FEB 1976
இறப்பு 11 NOV 2021
அமரர் ஜீவாதரன் சிவலோகநாதன் (ஜீவா)
வயது 45
அமரர் ஜீவாதரன் சிவலோகநாதன் 1976 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜீவாதரன் சிவலோகநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

நாட்காட்டியில் ஐந்து ஆண்டுகள் மாறிவிட்டன...
 ஆனால் எங்கள் மனதில் மட்டும்
 தாங்கள் இருந்த இடம் இன்னும்
அப்படியே இருக்கிறது.

சில நேரங்களில், தாங்கள் இன்னும்
எங்களுடன் இருப்பது போலத் தோன்றுகிறது.
பிறகு அந்த உண்மை நினைவுக்கு வரும்போது,
இதயம் மீண்டும் அமைதியாக அழுகிறது.

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எம்முடன் பிறந்தவனே எமது அருமைச் சகோதரனே!
உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததையா...
உடல் உயிரை பிரிந்தாலும்
 உணர்வுடன் ஒன்றாகிப்போன எமது உடன்பிறப்பே...

ஆண்டு ஐந்து போனாலும் அழியாது
நம் சோகம் மீளாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு
ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ!

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos