Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 27 FEB 1976
இறப்பு 11 NOV 2021
அமரர் ஜீவாதரன் சிவலோகநாதன் (ஜீவா)
வயது 45
அமரர் ஜீவாதரன் சிவலோகநாதன் 1976 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜீவாதரன் சிவலோகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

புங்குடுதீவுப் பூமரமே...!

பிறந்த இடத்தில்
இறந்தா அது புண்ணியமாம்-புலம்
பெயர்ந்த இடத்தில் இறந்தா அது அந்நியமாம்.

எதுவோ.....!
நீ இல்லை என்பதே
இனி மெய்யடா.,மீண்டும்
வருவாய் என்பதே
சுத்தப் பொய்யடா..

ஐயோ...

துயரோடு நெஞ்சமும்
பதற...உன்
பிரிவோடு கனடாவும்
கதற
கடல்போல கண்களும்
பெருக...உன்
உடல்கூட தணலாய்
கருக....

இரவுகள் நீ இன்றி
விடிந்ததடா..நம்
இமை மூழ்க கண்ணீரும்
வடிந்ததடா...
இதயத்தில் இடிஒன்று
விழுந்ததடா...உன்
இவ்வுலக பயணமும்
முடிந்ததடா...

உறவுகளை வளர்ந்து
வந்தவன்- எல்லோரையும்
உரிமையில் அழைத்து
நின்றவன்,
ஊரையும் உயர்த்திக்
கொண்டவன்-இன்றுதன்
உயிரையும் மறந்து
சென்றவன்.

ஜீவனே ஜீவா....!
கூடி அழுதாலும் யாரும் உன் கூட
வரப்போவதில்லை- உனை
தேடி அலைந்தாலும் யாரும்
உனைக்
காணப்போவதுமில்லை

இருந்தாலும்....!
உன் நினைவில் நாம் வாழ்வோம்-உனை
மறந்தாலும் ...!
எம் கனவில் உனைக்
காண்போம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 11-11-2021 சனிக்கிழமை அன்று Baba Banquet Halls & Catering, 3300 McNicoll Ave, Scarborough, ON M1V 5J6, Canada எனும் முகவரியில்  நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.