Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 FEB 1976
இறப்பு 11 NOV 2021
அமரர் ஜீவாதரன் சிவலோகநாதன் (ஜீவா)
வயது 45
அமரர் ஜீவாதரன் சிவலோகநாதன் 1976 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜீவாதரன் சிவலோகநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

குடும்பத்தின் ஒளி விளக்கே!
அன்பின் பிறப்பிடமே
ஆண்டு மூன்று ஆன போதும்
ஆறவில்லை நம் துயரம்!

காலம் கொண்டு சென்றதோ - உம்மை
தவிக்கும் உம் உறவுகளையும் தாண்டி...
சோக நெருப்பில் எமைதள்ளி
நீர் சென்ற இடம் தான் எதுவோ...? 

ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூடசில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?  

காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 

தகவல்: குடும்பத்தினர்

Photos