Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 FEB 1976
இறப்பு 11 NOV 2021
அமரர் ஜீவாதரன் சிவலோகநாதன் (ஜீவா)
வயது 45
அமரர் ஜீவாதரன் சிவலோகநாதன் 1976 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜீவாதரன் சிவலோகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 01-11-2022

ஓராண்டு கடந்தாலும் உனது நினைவு
நாடி ஈர விழிகளுடன் உன் வதனம்
 தேடி தீராத வேதனையை மனதில் பூட்டி
 மாறாத நினைவுகளில் நாமும் வாழ்கின்றோம்

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எம்முடன் பிறந்தவனே எமது அருமைச் சகோதரனே!
உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததையா...
அமைதியின் அடைக்கலமாய்
அன்பின் பிறப்பிடமாய்... பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்... திகழ்ந்த எம் சகோதரனே...!
உடல் உயிரை பிரிந்தாலும்
 உணர்வுடன் ஒன்றாகிப்போன எமது உடன்பிறப்பே

அன்பும் பண்பும் அறிவும் நிறைந்த
புன்னகையின் புகலிடமே உம்மருகில்
நாம் வாழும் பாக்கியத்தை
இழந்துவிட்டோம் அப்பா!

பாசத்தின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
எங்களுக்கெல்லாம் அன்புக் காட்டி
அரவணைத்த எங்கள் அன்புத் தெய்வமே

ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எங்கள் நெஞ்சங்களை
விட்டு என்றும் நீங்காது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos