Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 07 OCT 1978
விண்ணில் 07 FEB 2022
அமரர் ஜனகன் கோபாலகிருஷ்ணன்
வயது 43
அமரர் ஜனகன் கோபாலகிருஷ்ணன் 1978 - 2022 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜனகன் கோபாலகிருஷ்ணன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

உயிரே எங்கள் உயிர் ஓவியமே 
அலையும் அடித்து ஓய்ந்ததய்யா
காற்றும் வீச மறந்ததய்யா
கடவுளும் கருணையின்றிப் போனானே

நீ பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே?
மதுரமாய் பகிர்ந்த பேச்சு எங்கே?
கண்களில் காட்டிடும் கருணை எங்கே?
மண்ணில் எமக்கிருந்த சுகம் எங்கே?
இன்றெமைக் கலங்க விட்டதேனோ...!

என் செய்வோம் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை
போன திசை எது என்று தெரியாது....?
இளமையில் எமைப் பிரிந்தாய்
இதயத்தில் நிறைந்து நின்றாய்
நீ இல்லா இவ்வுலகு எமக்கு வெற்றிடமே!

எங்கும் நீ நிறைந்தாய்
எதிலும் நீயே நிறைந்தாய்
எங்களின் கண்களில் - நீர் நிறைத்து
நிஜத்தில் ஏன் மறைந்தாய்?

எங்களின் இறுதி மூச்சு உள்ளவரை
உன்னை நினைந்திருப்போம் எம் செல்வமே ஜனகனே..

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 09 Feb, 2022
நன்றி நவிலல் Fri, 11 Mar, 2022