50ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஐயம்பிள்ளை வீரகத்தி
வயது 49
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி : 30-11-2025
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த அவர்களின் 50ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐம்பதாகியும் உங்களை
இழந்த சோகம் மாறவில்லை அப்பா!
காலங்கள் எவ்வளவு கடந்தாலும் மாறாது
மறையாது உங்கள் அன்பும் பாசமும் அப்பா!
அன்புடையது எதுவும் இல்லை
அருகில் உள்ள எதுவும் அன்பு கொண்டது இல்லை
வாழ்வில் பல உறவுகள் இருந்தாலும்
புரிந்து கொள்ள யாருமில்லை
உங்களை நினைக்காத நாளில்லை
நித்தம் நித்தம் நினைத்து
எம் உள்ளம் தணல் வெடிக்குதையா!
நிஜமான உங்களை எங்கள் அருகில்
வைத்து வாழ ஆசைப்படுகிறோம்
ஆனால் நீங்கள் நிழலைக்கூடத் தராமல்
நினைவுகளைத்தான் தந்துவிட்டுச் சென்றுள்ளீர்!
தகவல்:
குடும்பத்தினர்
அன்புள்ள அப்பா, ஐம்பது ஆண்டுகள் கடந்து சென்றாலும், ஒவ்வொரு நொடியிலும் எங்கள் இதயத்தில் இருப்பது போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அப்பா. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்....