48ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஐயம்பிள்ளை வீரகத்தி
வயது 49
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த அவர்களின் 48ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து எம்மை
வழிநடத்திய அந்த நாட்கள் எம்
நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே ஐயா!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!
தந்தை என்ற சொல்லுக்கு இலக்கணமாய்
தரணி போற்றும்படி எம்மை வளர்த்தீர்கள்
எங்களது முன்னேற்றப்படிகளில் ஐயா
உங்கள் பாதம் பதிந்ததை எப்படி மறந்திடுவோம்
என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
அன்புள்ள அப்பா, ஐம்பது ஆண்டுகள் கடந்து சென்றாலும், ஒவ்வொரு நொடியிலும் எங்கள் இதயத்தில் இருப்பது போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அப்பா. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்....