யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த அவர்களின் 45ம் ஆண்டு நினைவஞ்சலி.
உறவுமுறை கூறி உறவாடும் உத்தமரேஉங்கள் உள்ளம் அது வெள்ளை தானே!உயர்வான குணங்கள் பல கொண்டவரேஉதிரும் புன்னகை கொண்டு எம்துன்பம் தனை துடைப்பவரே!
நீர் இவ்வுலகில் நேர்வழி காட்டிநாம் சென்ற பாதையெல்லாம்நல்லவராய் வேண்டுமென்றுகண்மணி போல் காத்திருந்தஎம் தந்தையே! எங்கு சென்றாய்?
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனதுஆண்டுகள் பல கோடி சென்றாலும்ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
மறைந்தும் மறையா எங்கள்ஆதவப்பெரும் ஜோதியே! உங்கள் ஒளிக்கீற்றில்நாங்கள் வாழ்வது போல்...
எங்கள் உயிர் மூச்சில்நீங்களும் எம்முடன்இன்னமும் வாழ்கிறீர்கள்!
எங்கள் நெஞ்சமதில் நிறைந்திருக்கும்அன்புத் தெய்வத்தின் பொற்பாதத்தில்மலர்தூவி மலர் அஞ்சலி செய்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!