5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஐயம்பிள்ளை தாமோதரம்பிள்ளை
(ஆட்டோமாமா)
வயது 72
அமரர் ஐயம்பிள்ளை தாமோதரம்பிள்ளை
1948 -
2021
பாவற்குளம், Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி:28/02/2026
வவுனியா பாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சரவணையை வசிப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை தாமோதரம்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அழகான வார்த்தை அப்பா
ஆயிரம் தடவை சொன்னாலும்
அழகான வார்த்தையிது
இதயத்தின் ஆழத்தில்
உதித்து உதிரத்தை
உறைய வைக்கும் வார்த்தையிது
நெஞ்சமதில் நிலைத்து நின்று
எண்ணமதில் என்றும் நிலைத்து
வண்ண மலர் வாசமென
எம் மனங்களிலே வீசிநின்றீர்
கண்ணிமைக்கும் காலத்துள்
காலனுமைக் கவர்ந்து சென்ற
கொடுமையெண்ணிக் கலங்குகின்றோம்
மனம் வெதும்பி வாடுகின்றோம்
உம் இழப்பினை ஏற்றுக் கொள்ள முடியாமல்
கண்ணீரில் தத்தளிக்கின்றன
எங்கள் விழிகள்!!
பாசத்தின் உறைவிடமே மீளாத சோகத்தினை
எமக்கெல்லாம் தந்து மறைந்து போன எம் தெய்வமே,
தினம், தினம் எண்ணிக் கலங்குகின்றோமே
கண்ணீர் பெருக!
தகவல்:
குடும்பத்தினர்