வவுனியா பாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சரவணையை வசிப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை தாமோதரம்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் ஆசை அப்பாவே
எங்கள் குடும்ப தெய்வமே
சிறுவயதில் இருந்து விபரம்
தெரியும் வரை உங்கள் அன்பு
பாசத்திற்கு ஈடு இணை இல்லையப்பா
அம்மாவுக்கோ, நமக்கோ சிறு துயரம் என்றாலும்
நீங்கள் துடியாய் துடிப்பீர்கள் அப்பா
உங்களுக்கு ஏதும் துயரம் என்றால்
மற்றவர்களுக்கு தெரியப்படுத்தாது,
நீங்களே வைத்தியராக மாறி மருத்துவம்
செய்வீர்கள்.
அம்மா, பிள்ளை, தம்பி என்ற வாய் தற்போது
ஒய்ந்து போனதேனோ!
நல்லது கெட்டது எது என கேட்டால்
எமக்கு நல் அறிவுகள் தந்த
நல் ஆசான் நீங்கள் தான்
உங்கள் மனம் போலவே அன்பான,
பாசமான மருமக்களை வரமாக பெற்றீர்கள்!
இன்சொல்லான கதைகள் கூறி பேரப்பிள்ளைகளுடன்
அன்புடன், பாசமுடன் அழகாக
கதைப்பீர்களே!
ஊருக்குள் அப்பாவுக்கு நல்ல பெயர்.
ஊருக்குள் அப்பாவை நேசிக்காத மக்களில்லை.
ஆட்டோ மாமா என மிகவும் அழகாகவும்,
அன்பாகவும் அழைத்து மரியாதை செய்வார்கள் அப்பா
அப்பா உங்கள் உதட்டில்வரும் புன்சிரிப்பே இன்றுவரை
பலரது இதயங்களில் நிலைத்து நிற்கின்றீர்கள்.
உறவினருக்கு உதவியென்றால் உறக்கமில்லை
உங்களுக்கு எங்கே நீங்கள் எங்கே
நீங்கள் என்று கண்கள் தேடி தேடி
ஒவ்வொரு நொடியும் அலைகிறது.
அம்மாவையும் ஒரு செல்லப்பிள்ளை போல் பார்த்து
அனைத்து பொறுப்புகளையும் நீங்களே பார்த்தீர்கள்.
இவ்வளவு சீக்கிரம் அம்மாவை,
எங்களை தனியாக விட்டு சென்றீர்கள் அப்பா!
நாம் தட்டு தடுமாறி நிற்கின்றோம் .
நெஞ்சத்து நெடிய தோற்றம் உடையவரே
வஞ்சமில்லா மனதோடு வாழ்ந்தீர்கள்.
தஞ்சமென்று இறையடி திகழ்ந்தீர்கள்
ஆற்றொனா துயரமுற ஆண்டு இரண்டு ஆனதுவோ?
தெய்வமாக வீற்றிருந்து ஆறுதலை தந்திடுங்கள்
எங்கள் ஆருயிர் அப்பாவே!
மீட்டும் நினைவுகளில் மீண்டும்
எங்களுடன் நீங்கள்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உங்கள் நினைவுகளுடன் வாழும்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.