

திதி:10/03/2025
வவுனியா பாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சரவணையை வசிப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை தாமோதரம்பிள்ளை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு!
இன்றும் உங்கள் பிரிவால்
எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்..!
உங்களை உருக்கி எமக்காக உயிர்
உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எங்களை நினைத்து
எங்களுக்காய் இவ்வுலகில்
எல்லாம் செய்தீர்கள்!
அல்லும் பகலும் ஓயாது
உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க
இறைவனடி சென்றீரோ!
காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்!
மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!
நாமென்றும் அஞ்சலிப்போம்
உங்கள் ஆத்மா சாந்திபெற!
காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்..!
அன்புத் தெய்வமே அப்பா ஆறாத்துயரில்
துடிக்கின்றோமே!
எம்மை விட்டு நீங்கள் சென்று
ஆண்டுகள் நான்கு ஆனதுவோ!
காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை தவிக்க விட்டு?
பிரிவினில் உங்கள் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்!
பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் தான் தெரிகிறீர்கள்
நேரில் வரமாட்டீர்களோ அப்பா!
என்றும் உங்கள் ஆன்மா சாந்தி பெற
இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்..!