

வவுனியா பாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சரவணையை வசிப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை தாமோதரம்பிள்ளை அவர்கள் 23-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை கண்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுகிதா(ஜேர்மனி), சுரேஸ்(அப்பன் - லண்டன்), காலஞ்சென்ற சதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவேந்திரன்(ஜேர்மனி), வித்தியாயினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குலசேகரம், மனோண்மணி மற்றும் தங்கலட்சுமி, காலஞ்சென்ற பொன்மணி மற்றும் புஸ்பவதி, காலஞ்சென்றவர்களான ஆனந்தசிவம், எமில் பற்றிக் மற்றும் தெய்வேந்திரகுமார், மோகனாதேவி, வசுமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், இராஜகோபால், சின்னராசா, அந்தோனிப்பிள்ளை, சிவபாக்கியம், கணபதிப்பிள்ளை மற்றும் இரத்தினசிங்கம், அமுதநாதன், கந்தசாமி, நவமலர், செல்வராணி, சிவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிஷாந்தினி, கஜன், சோபிதன், தர்னிஷா, தரன்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.