யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், சுவிஸ் Bern Ittigen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை சாந்தலிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எட்டு ஆண்டுகள் ஓடி மறைந்தன
மூழ்குமா உந்தன் நினைவுகள்
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
எங்கள் அன்புத் தெய்வமே!
எம் குலவிளக்கு
ஒளி விட்டுப் பிரகாசிக்கும்
என நாமிருக்க
ஒளி இழந்து போனதேனோ...?
எங்கள் கனவுகளிலாவது
ஒரு தரம் வந்துவிட்டு
சென்று விடுங்கள் அப்பாவே...!
பாதி வழிதனிலே
விதி வந்து பிரித்ததுவோ?
பரிதவித்து நிற்கின்றோம்
விரைந்தோடி வருவீர்களோ!
இன்று எம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
எட்டு வருடம் விரைந்தே போனது!
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி நிற்கின்றோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
மாமா, உங்கள் நினைவுகள் எப்போதும் எங்கள் மனங்களில் இருந்து கொன்டு தான் உள்ளது. உங்கள் ஆத்மா சாந்தி ஆடைய பிரதிக்கின்றோம். ( We are missing you mama)அசோகன் லதா குடும்பம் லண்டன்.