யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், சுவிஸ் Bern Ittigen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை சாந்தலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அப்பா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
இரண்டு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!
எங்கள் இதயக் கோவில்களில்
என்றும் நீங்கா இடம்பெற்று வீற்றிருக்கும்
உங்களை எங்கள் பாசப் பூக்கள் தூவி
அர்ச்சனை செய்து பூஜிக்கின்றோம்!
எங்கள் வாழ்நாளில் நீடிக்கும் வரை
உங்கள் நினைவலைகள்
உங்களிற்காய் தலை வணங்குகின்றோம்!
உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
உங்கள் பிரிவால் துயரும் மனைவி, மகன், மருமகள், பேரன்.
மாமா, உங்கள் நினைவுகள் எப்போதும் எங்கள் மனங்களில் இருந்து கொன்டு தான் உள்ளது. உங்கள் ஆத்மா சாந்தி ஆடைய பிரதிக்கின்றோம். ( We are missing you mama)அசோகன் லதா குடும்பம் லண்டன்.