

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், சுவிஸ் Bern Ittigen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை சாந்தலிங்கம் அவர்களின் 31ம் நினைவஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய்
பாசத்தின் உறைவிடமாய்
தரணியிலே என் அருகில்
எம் துணையாய் வாழ்ந்த என்னவரே
இவ்வுலகை விட்டு பிரிந்ததுதான் ஏனோ?
உன் பிரிவு என் வாழ்வில்
அழியாத நினைவலைகள்
அன்பையும் அறிவையும் அதிகமாய் தந்து
எனை வளர்த்த அப்பாவே
இந்த அவனியிலே எமை தவிக்கவிட்டு
அமைதியாய் சென்றீர்களோ
அப்பா உங்கள் பிரிவு என் இதயத்தில்
அணையாத சுடர்விளக்கு
நாம் கண் அயரும் நேரமெல்லாம்
கனவினிலே நீ வந்து எமை அழைக்கும்
உம் குரலே எம் செவிகளிலே ஒலிக்கிறது
உங்கள் நிஜமான வாழ்வுதான்
நிழலாகி போனதுவோ
கண்ணீர் நிறைந்த வலியோடும்
கனத்த மனத்தோடும் உங்களுக்கு
நாம் அஞ்சலி செலுத்துகிறோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம்.
உங்கள் பிரிவால் துயரும் மனைவி, மகன்,
மருமக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள்.
என் கணவரின், அப்பாவின் பிரிவு செய்தி கேட்டு நேரில் வந்தவர்களுக்கும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு துயர் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் மற்றும் அனைத்து வகைகளிலும் உதவி செய்தவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் 25-11-2018 அன்று Europaplatz 1, 3008 Bern, Switzerland எனும் முகவரியில் அமைந்துள்ள பேர்ன் ஞானலிங்கேஸ்வர ஆலய மண்டபத்தில் அன்னாரின் நினைவால் வழங்கப்படும் மதிய போசனத்தில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
மாமா, உங்கள் நினைவுகள் எப்போதும் எங்கள் மனங்களில் இருந்து கொன்டு தான் உள்ளது. உங்கள் ஆத்மா சாந்தி ஆடைய பிரதிக்கின்றோம். ( We are missing you mama)அசோகன் லதா குடும்பம் லண்டன்.