7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஐயம்பிள்ளை சாந்தலிங்கம்
வயது 73
அமரர் ஐயம்பிள்ளை சாந்தலிங்கம்
1945 -
2018
புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், சுவிஸ் Bern Ittigen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை சாந்தலிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை தந்தையே
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து 7 ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் அப்பா!
ஆண்டவன் படைப்பினை ஆழமாய் பார்த்தாலும்
பாசமாய் உங்களின் பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின் புன்னகையை ரசிக்கின்றோம்!
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே அப்பா!
காவல் தெய்வமாய் எங்களோடு என்றும்
நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும்
அன்புத் தந்தையே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
மாமா, உங்கள் நினைவுகள் எப்போதும் எங்கள் மனங்களில் இருந்து கொன்டு தான் உள்ளது. உங்கள் ஆத்மா சாந்தி ஆடைய பிரதிக்கின்றோம். ( We are missing you mama)அசோகன் லதா குடும்பம் லண்டன்.