Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 APR 1945
இறப்பு 26 OCT 2018
அமரர் ஐயம்பிள்ளை சாந்தலிங்கம் 1945 - 2018 புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், சுவிஸ் Bern Ittigen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை சாந்தலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஐயா நீ எங்கு சென்றாய்
என் உயிர் எங்கு சென்றாய்
ஆண்டொன்று சென்றாலும் உன் நினைவுகள் என்
இதயத்தில் நீங்காத நினைவலைகள்
வேசம் தான் வாழ்வென்று என்னை விட்டு சென்றாயோ
கதறி அழுகின்றேன் உன் கனி முகத்தை தேடுகிறேன்
ஓராண்டு காலம் ஓடி முடியுமுன்பே சூரியனாய்
உன் பேரன் இவ்வுலகினிலே வந்துதித்தான்
நாம் ஏங்கித் தவைக்கின்றோம்
உங்கள் மடிதனிலே தவழ விட ஐயா நீ
இல்லா வாழ்வெனக்கு
நிலவில்லா வானமையை ஆண்டவனே உனை அழைத்தான்
அவன் பாதமதில் உன் ஆன்மா சாந்தி பெற வேண்டுகிறேன்

அப்பா உன் அன்பு முகம் இனி
எப்போ நான் காண்பேன்
எப்போதும் எனை அணைத்து இனிய கதை பல சொல்லி
தப்பான பாதையிலே நான் போகாமல்
அறிவுரைகள் தந்து  என்னை வளர்த்தீர்கள்
நாம் குடும்பமாய் வாழும் இந்நேரத்தில்
நீங்கள் எம்முடன் இல்லை அப்பா தாங்கவே முடியவில்லை
உங்கள் பிரிவுதனை எங்கே நான் பார்த்தாலும் உங்கள்
அன்பு முகம் தெரியுதப்பா என் கண்ணுக்குள் நெஞ்சுக்குள்
எப்போதும் நிறைந்திருப்பாய் எத்தனை பிறவிகள்
நான் எடுத்தாலும் தந்தையே உன் தாளாத
துயரினை தந்தாலும் என் அப்பாவின் ஆத்மாதான்
ஆண்டவனின் பாதமதில் சாந்தி பெற வேண்டுகின்றேன்

மாமா நீங்கள் எனக்கு மனம் நிறைந்த தெய்வமன்றோ
பாவம் என்ன செய்தேனோ என் மாமாவை இழப்பதற்கு
பாசமுள்ள என் மாமா எம்மை பாதுகாக்க நீங்கள் இல்லை
நிழலாக இருந்து எம்மை நித்தமும் காத்திடுங்கள்
மாமா நீங்கள் எமக்கு மகனாய் பிறந்தீர்கள் நித்தம்
எம்மடியில் தவழ்வீர்கள் நீங்கள் எம்மை விட்டு பிரியவில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
உன் பிரிவால் துயரும் மனைவி, மகன், மருமகள், பேரன்.

அன்னாரின் 1ம் ஆண்டு நினைவுகிரியை அவரது இல்லத்தில் 14-11-2019 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்