

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானசேகரம் பவுசியாவானி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு போனபின்பும்
அழுதவிழி ஓயவில்லை
அன்பு மனம் கொண்டவுனை
அனுதினமும் நினைக்கின்றோம்
நீயிருந்த காலமெல்லாம்
நிம்மதியாயிருந்தோமே
ஏன் எமைப்பிரிந்தாய்
தூரநோக்கு சிந்தனையால்
துளிர்விட்டு வளர்த்தவளே
துணிவோடு முடிவெடுத்து
தூணாக நின்றவளே-
இன்று துணையின்றித்தவிக்கின்றோம்..
யார் கண்தான் பட்டதுவோ
காலனவன் கவர்ந்து கொண்டான்
உன் கனவெல்லாம் நனவாக்கி
நின் காலடியில் சமர்ப்பிப்போம்..!
ஈராண்டு காலம் இமைப்பொழுதில் போனதம்மா
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
அன்னையே உன்னைப்போன்று அன்பு செய்ய
யாரும் இல்லை அம்மா இவ்வுலகில்!
அம்மா எங்கள் உயிருடன் கலந்திட்ட
உங்கள் உதிரம் எம் உடலில் உள்ளவரை
நீங்கள் எம் ஒவ்வொருவரின் உயிருக்குள்
உயிராக வாழ்வீர்கள் எம்முடன்
நாம் இவ்வுலகில் உள்ளவரை!
மறுபிறவி என இருந்தால் மீண்டும் நாம்
உங்கள் கருவறையில் புதிதாக உருவெடுத்து
உங்கள் மடியில் நாம் தவழ வேண்டும் அம்மா!
வானத்தின் நிலவாய் வையகத்தின் தென்றலாய்
எங்கள் இதயத்தில் என்றென்றும் வாழும்
உங்களுக்கு எங்களது நினைவஞ்சலிகள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
Dear Amma, If love is as sweet as a flower then ,my mother is that sweet flower of love.