Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 JAN 1935
இறப்பு 09 DEC 2016
அமரர் ஞானாம்பிகை சுப்பிரமணியம்
உரிமையாளர்- மெட்ரோ சிம்புளோன் ஞானமணி பல்பொருள் வாணிபம், திரான்சி ஞானமணி பல்பொருள் வாணிபம்
வயது 81
அமரர் ஞானாம்பிகை சுப்பிரமணியம் 1935 - 2016 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானாம்பிகை சுப்பிரமணியம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அன்புடனும் பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும்
விட்டு பிரிந்தது ஏனோ?

துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய் - அம்மா

காலங்கள் மாறுகின்றன,
 காட்சிகள் மாறுகின்றன
உள்ளத்தில்; உங்கள் நினைவுகள் கடல் 
அலைகள் போல் ஓயாமல் வருகின்றன.

7 ஆண்டு சென்றாலும்
உங்கள் தோற்றமும் உங்கள் சிரிப்பும்
நாம் உள்ள வரை நெஞ்சில்
நிறைந்து இருக்கும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்