Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 JAN 1935
இறப்பு 09 DEC 2016
அமரர் ஞானாம்பிகை சுப்பிரமணியம்
உரிமையாளர்- மெட்ரோ சிம்புளோன் ஞானமணி பல்பொருள் வாணிபம், திரான்சி ஞானமணி பல்பொருள் வாணிபம்
வயது 81
அமரர் ஞானாம்பிகை சுப்பிரமணியம் 1935 - 2016 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.


யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானாம்பிகை சுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

இன்றோடு மூன்றாண்டு
அவணியிலே நீங்கள் இல்லை
நினைக்கையில் வியக்கின்றேன்
நிஜமாய் நான் வாழ்ந்தேனா?

நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர் !

அன்பாய்  அம்மா என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லையம்மா

மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!

பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்