யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானாம்பிகை சுப்பிரமணியம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டு குல விளக்கே
எமை விட்டு பிரிந்தது ஏனோ
அன்பின் நிறைவிடமே அம்மா
பாசத்தோடும் சிரித்த முகத்தோடும்
கண்ணின் இமை போல் எமை காத்து
துன்ப துயரம் தெரியாது எமை வளர்த்து
தரணியிலே எமை உயரவைத்து
இன்பமுடன் நாம் வாழ வழிகாட்டி
எமை எல்லாம் ஆழாத்துயரில்
ஆழ்த்தி விட்டு சென்று ஆனதம்மா
நான்கு ஆண்டு காலமதில் உனை பிரிந்து
ஒரு நொடிப்பொழுதும் உனை மறவாமல்
நாம் வாழ்கின்றோம்
ஓயாது உன் நினைவு வந்து வந்து
எதிர் கொள்ள ஒவ்வொரு கணமும்
துடி துடிக்க உயிரோடு வாழ்கின்றோம்
எத்தனை ஆயிரம் உறவுகள் எமை
அணைத்திட இருந்தாலும் அத்தனையும்
எம் அம்மாவுக்கு நிகராகுமா?
ஆண்டுகள் பல ஆனாலும் என்ன
ஆறாது அம்மா எம் துயரம்
நீங்காது அம்மா எம் மனதில் உன் நினைவு
பத்து மாதங்கள் எம்மை பாரமென்று எண்ணாது
தன் கருவறையில் சுமந்து- நாம்
உருப்பெற உதவும் உத்தமி அவளே அம்மா
பாலோடு அன்பையும் சேர்த்தே எமக்கூட்டி
இப்பாரினில் எமை நல் மனிதராய்
உலாவரச் செய்யும் உயர்ந்த ஜீவன் அவளே அம்மா
தன் ஊனை மறந்து உறக்கத்தை துறந்து
நம் உடல் நலம் காக்க- தன்நலம்
மறக்கும் ஓர் பொதுநலவாதி அவளே அம்மா
சுயநலம் ஏதுமின்றி நம்நலமே நோக்காகி
நாளும் நமக்காய் அயராது உழைக்கும்
ஓர் உயர்ந்த உழைப்பாளி அவளே அம்மா
அம்மா என்பது ஓர் அமுதமொழி
அதை சொன்னால் தீரும்
எம் எல்லா வலியும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts. Syed and All of us at RIPBOOK