Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிறிஸ்தோப்பர் பெனடிக்ற், அமரர் பெனடிக்ற் பிரான்சிஸ்கா
ஆண்டவன் அடியில் - 19 AUG 2021
அமரர் கிறிஸ்தோப்பர் பெனடிக்ற், அமரர் பெனடிக்ற் பிரான்சிஸ்கா 2021 கரம்பொன் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

அமரர் கிறிஸ்தோப்பர் பெனடிக்ற்:
பிறப்பு: 02 JUL 1942
இறப்பு: 19 AUG 2021

யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் தெற்கு, கொழும்பு 15 மோதரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்தோப்பர் பெனடிக்ற் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அன்புத் தெய்வமே அப்பா
 எங்களை விட்டுப்பிரிந்து இன்று
ஐந்தாண்டு ஆனது அப்பா...

எத்தனை இன்னல்கள்
வந்தாலும் அப்பா நீங்கள்
எம்மோடு இருக்கின்றீர்கள்
 என்றெண்ணி வாழ்ந்தோம்
 ஆறாத்துயராய் ஆனதே
 உங்கள் பிரிவு எம்முள்ளே.

ஆண்டுகள் எத்தனைதான்
சென்றாலும் உங்கள் அன்பு
 முகமும், உங்களது பாசமும்
 எம்மைவிட்டு என்றுமே நீங்காது!

ஐய்யாயிரம் வருடங்கள்
 ஆனாலும் உங்கள்
 நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

இந்நாளில் உங்கள் ஆத்மா
 சாந்தியடைய இறைவனைப்
 பிரார்த்திக்கின்றோம்!  


அமரர் பெனடிக்ற் பிரான்சிஸ்கா:
பிறப்பு: 10 SEP 1945
இறப்பு: 20 AUG 2021

யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் தெற்கு, கொழும்பு 15 மோதரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பெனடிக்ற் பிரான்சிஸ்கா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
அம்மா ஐந்து ஆண்டுகள்
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!

கனவுகள் பல கண்டு
ஆசிகளுடன் எம்மைப் பிரிந்த
எம் இனிய அன்னையே!

வருடங்கள் பல உருண்டோடினாலும்- உங்கள்
உருவம் கண்ணிலே நிற்குதம்மா

எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!

ஆண்டு பல உருண்டு சென்றாலும்
உங்களை எங்கள் உயிர் உள்ளவரை
தெய்வமாக பூசிப்போம்.!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!



தகவல்: நிக்சன்(மகன் - சுவிஸ்)