Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிறிஸ்தோப்பர் பெனடிக்ற், அமரர் பெனடிக்ற் பிரான்சிஸ்கா
ஆண்டவன் அடியில் - 19 AUG 2021
அமரர் கிறிஸ்தோப்பர் பெனடிக்ற், அமரர் பெனடிக்ற் பிரான்சிஸ்கா 2021 கரம்பொன் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

அமரர் கிறிஸ்தோப்பர் பெனடிக்ற்:
பிறப்பு: 02 JUL 1942
இறப்பு: 19 AUG 2021

யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் தெற்கு, கொழும்பு 15 மோதரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்தோப்பர் பெனடிக்ற் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தெய்வமே!
அகிலம்விட்டு அவனடி அடைந்து அவனியில்
ஆண்டு மூன்று அகன்றும் ஆறாத்துயரில்
அழுகின்றோம் நாமிங்கு.

உங்களை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் தவியாய் தவிக்கிறதே!
திரும்ப திரும்ப கேட்டாலும்
திரும்பி வரமாட்டீர்களா

உங்களோடு மகிழ்ந்திருக்கும்
காலத்தை தவறவிட்டு
தவியாய் தவிக்கின்றோம்..

ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
உங்கள் திருமுகம் எங்களை
விட்டு மறையுமா மறக்குமா...

என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்...


அமரர் பெனடிக்ற் பிரான்சிஸ்கா:
பிறப்பு: 10 SEP 1945
இறப்பு: 20 AUG 2021

யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் தெற்கு, கொழும்பு 15 மோதரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பெனடிக்ற் பிரான்சிஸ்கா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

இம் மண்ணில் எம்மை
மலரவைத்த தாயே!
ஆண்டு மூன்று ஆனாலும்
உமது எண்ணங்கள் எமது கண்ணில்.....
துளியாய் வடிகின்றது!

பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே

உங்கள் அன்பின் ஆழம்தான்
இன்றும் எம் விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது

நீங்கள் எங்களை ஒருபோதும்
விட்டு விடவில்லை நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: நிக்சன்(மகன் - சுவிஸ்)