அமரர் கிறிஸ்தோப்பர் பெனடிக்ற்:
பிறப்பு: 02 JUL 1942
இறப்பு: 19 AUG 2021
யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் தெற்கு, கொழும்பு 15 மோதரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்தோப்பர் பெனடிக்ற் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்!
உரிமை சொல்ல எத்தனை
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா
என்ற உறவுக்கு யாருமே நிகரில்லை!
ஆண்டு இரண்டு போனாலும் அழியாது
நம் சோகம் மீளாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு
ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
அமரர் பெனடிக்ற் பிரான்சிஸ்கா:
பிறப்பு: 10 SEP 1945
இறப்பு: 20 AUG 2021
யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் தெற்கு, கொழும்பு 15 மோதரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பெனடிக்ற் பிரான்சிஸ்கா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டானதம்மா
ஆறாத உன் ஞாபகங்கள்
மீண்டும் மனதில் உருண்டோட
மீள முடியாது தவிக்கின்றோம்
மெளனமாய் அழுகின்றோம்!
உன் அன்பான பேச்சும்
இரக்கம் கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும்
உன் போல துணையும்
யாருமில்லை இன்றுவரை!
கணப்பொழுதில் கண்மூட
உன் இறுதி மூச்சு நின்றோட
நம்ப முடியவில்லை இன்னளவும்
நீ இல்லாத வாழ்க்கையை!
காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உன் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு நீங்காது அம்மா...