

அமரர் கிறிஸ்தோப்பர் பெனடிக்ற்:
பிறப்பு: 02 JUL 1942
இறப்பு: 19 AUG 2021
யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் தெற்கு, கொழும்பு 15 மோதரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்தோப்பர் பெனடிக்ற் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
தந்தையே எங்கள் ஆருயிர் அப்பாவே
விண்ணையே நோக்கி நீ விரைந்திட்டதால்
விழிகள் நித்தம் கண்ணீரால் நிறைகிறது
கண்ணின் மணிபோல் எம்மை காத்து நின்றாயப்பா
இருளினுள் மறையும் நிழலும்
ஒளிவர உயிர்த்துக்கொள்ளும்
மறைந்து நான்கு வருடம் போயும்
மறுபடி வராததேனோ?
உம் உறவுகள் நாம் இங்கு
கதி கலங்கி நிற்போம் என்று
ஒரு கணம் நினைத்துப் பார்க்க
உமக்கு மனம் வரவில்லையோ?
காலன் அவன் ஆசை கொண்டு
கவர்ந்து சென்றானோ உம் உயிர்தனை
காலம் காலமாய் உம் நினைவால்
காத்து நிற்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் தெற்கு, கொழும்பு 15 மோதரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பெனடிக்ற் பிரான்சிஸ்கா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நான்கு ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
உங்கள் உடல்தான் பிரிந்து சென்றது
ஆனாலும் முழு நினைவாக- உங்கள்
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா!
நேசம் என்றும் நிலைத்திருக்க
அன்பான அன்னையாய்
ஆருயிர்த் துணைவியாய்
அழகான வாழ்க்கையில்
நிலவாக வாழ்ந்தாயே
மனதோடு போராடும்
மறையாத ஞாபகங்களுடன்
மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!