Clicky

அன்னை மடியில் 05 MAR 1954
இறைவன் அடியில் 08 AUG 2023
அமரர் பாலசுப்பிரமணியம் தர்மகுலராணி 1954 - 2023 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Subramaniam kugathasan 14 AUG 2023 France

இவர் எங்கள் ராணி அக்கா அதிலும் பாலன் அண்ணா அவர் மனைவி இவர் அக்கா 80 களில் உறவுகளை விட்டு தனித்தனியாக பிரான்ஸ் வந்து தனித்து தவித்து நின்ற என் போன்ற சிறுவயதினருக்கெல்லாம் அன்பும் பாசமும் என்நேரமும் சிரித்த முகத்துடன் வரவேற்று உபசரித்து ஆறுதல் தரும் அக்கா இவர். இவரது மகள் காயத்ரி தான் எங்களுக்கெல்லாம் நாங்கள் கண்ட மூத்த மருமகள். எங்கள் திருமணங்கள் எமது பிள்ளைகளின் எந்த விடயமானாலும் இவர் தான் நடாத்தி வைப்பார். இவருக்கு மட்டுமே சம்பிரதாய முறைகள் தெரியும். பெரியவர்கள் யாருமே இல்லாத அந்த காலப் பகுதியில் திருமணம் முடித்து முதல் விருந்து தருபவராக இவரே இருப்பார். சொர்க்கத்தின் கதவுகள் உங்களுக்கு எப்பொழுதும் திறந்தே இருக்கும். சென்று அமைதி பெறுங்கள் அக்கா. ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! (சிலவற்றை சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லி ஆகணும். இல்லையென்றால் இனி அதற்கு சந்தர்ப்பமே வராமல் போய்விடும்.)

Tributes