Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 05 MAR 1954
இறைவன் அடியில் 08 AUG 2023
அமரர் பாலசுப்பிரமணியம் தர்மகுலராணி 1954 - 2023 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Drancy யை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் தர்மகுலராணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 28-07-2024.

ஆரத்தழுவி அணைத்த கைச்சூடு
எம்மேல் இன்னும் குறையவில்லை
 ஆண்டு ஒன்று ஆனதுவோ!!!

பேத்திகளை கட்டியணைத்த
 கதகதப்பு கலையவில்லை
மாதங்கள் பன்னிரண்டு மறைந்ததுவோ!!!

ஓய்வின்றி ஓடிய கை, கால்களுக்கு ஓய்வு
 கொடுத்தானோ இறைவன் அன்று.

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் கண்கள்
கணப் பொழுதில் இமைக்க மறந்ததுவோ!!!

நாணத்துடன் புன்முறுவலிக்கும் உதடுகள்
 கனிவாக சிரிக்க மறந்ததுவோ!!!

அன்புகாட்டு, ஆசை தவிர், ஆடம்பரம்
குறை, இயல்பாய் இரு, பொறுமைகார் என
 அத்தனையும் கற்றுத்தந்த தாயே உன்னை
 எங்களோடு இன்னும் சில காலங்கள் வாழ
 கருணை காட்டவில்லையே இறைவன்.

இன்ப துன்ப நிகழ்வுகளை நெறிப்படுத்தி
 சீரும்சிறப்புமாய் நடத்த முன் நிற்கும் தாயே
 அவ்விடத்தை இனி எப்படி பார்ப்போம் நாங்கள்!

'எங்கள் கண்கண்ட தெய்வம்"

எங்கள் குடும்பமெனும் நூலகத்தில் முதல் புத்தகமாக
முக்கிய பொக்கிஷமாக இருந்தவர் ராணி எனும் அகராதி. தனக்கு
வலித்தாலும் தன்னை நேசித்தவர்களுக்கு
வலிக்கக் கூடாது என நினைத்த நிவாரணி
 ''ராணி' எனும் ஔடதம்.

நன்னீரில் இட்ட சீனியாக கரைந்தோம்
நாங்கள் அம்மா. காணும் கண்களுக்கு
எங்களைத் தெரியவில்லை தண்ணீர் தானே
 தெரிகிறது. சலனமற்ற தெளிந்த நதியாய்
நீங்கள் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருந்தீர்கள்.
 இருகரையில் செழிப்பான விருட்சமாக
நாங்கள் இன்று அம்மா.

உன் உடலை வருத்தி தாய்மையாகி
என்னை உலகிற்கு ஆடவன் ஆக்கிய
 என் ராணி நீயல்லவா!!
 காத்திருந்து கடவுளிடம் கருணை கேட்டு
கருவறையில் எங்களைச் சுமந்த தாயே!!!

கடவுளைப் பார்த்து கையெடுத்து கும்பிடும்
போது கண்ணுக்குள்ளே தெரிவது என்னவோ
என்றும் நீதானே அம்மா.

குறைகள் இல்லா நிறைவு கண்டோம்.
துன்பமில்லா இன்பம் கண்டோம்.
தீமையில்லா நன்மை கண்டோம்.
சோகமில்லா மகிழ்ச்சி கண்டோம்.
முடிவில்லா தொடக்கம் கண்டோம்.
 அஸ்தமனமில்லா உதயம் கண்டோம்.
அசுத்தமில்லா சுத்தம் கண்டோம்.
அநாகரீகமில்லா நாகரீகம் கண்டோம்.
 அநீதி இல்லா நீதி கண்டோம்.
இறப்பில்லா பிறப்பைக் கண்டோம்.
அது உங்கள் மூலமே கண்டோம், அம்மா.

இறப்பில்லா பிறப்பு உண்டெனில் அது
எல்லோருக்கும் கிடைக்காது.கிடைக்கப்
பெறுபவர்கள் உண்மையான தூய
அன்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.
உறவுகளுடன் உள் அன்புடன் இருக்க
வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
 உதவ வேண்டும். இப்படி வாழ்ந்தால்
எல்லோர் மனங்களிலும் என்றும்
இறப்பின்றி வாழலாம் என்போம்.

உங்களை பற்றிய பேச்சும் நினைவுகளும்
 எங்கள் உயிர் உள்ளவரை இருக்கும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
 வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

என்றும் எங்கள் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்
 குடும்பத்தினர்
 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்