யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Drancy யை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் தர்மகுலராணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அமைதியின் இருப்பிடமாய் ,
ஆனந்தம் ததும்பும் ஊற்றாய்,
இன்பங்கள் பொங்கும் இமயமாய் ,
ஈன்றோற்கு பெருமை சேர்த்த மகளாய்,
உறவுகளுக்கு நற்ப்பெண்ணாய்,
ஊரவர்களுக்கு உற்ற நண்பியாய் ,
எதிரிகளே இல்லா இனியவளாய் ,
ஏழைகளுக்கு உதவுவதில் கர்ணனாய் ,
ஐயம் இடுவதில் அமுத சுரபியாய்,
மொத்தத்தில் மனித நேயத்துடன்
வாழ்
நாட்களை வசந்தமாக்கிய தாயே!!
எவரும் நினைத்துக்கூட பார்க்கவில்லையே !!
கிளை பரப்பி நின்ற ஆலமரத்தை
காலன் எனும் சூறாவளி அடியோடு
புரட்டி யதோ!!!
நிமிர்ந்து நின்ற கோபுரத்தை இடி வந்து
வீழ்த்தியதோ!!!
பூத்து,காய்த்து குலுங்கிய பழ மரத்தை
புயல் வந்து தாக்கியதோ!!!
அழகாய் கட்டி வாழ்ந்த வீட்டை ஆழி
பேரலை வந்து நாசமாக்கியதோ!!!
நின்மதியாய் வாழ்ந்த குடும்பத்தை
நிற்கதியாக்கிய இறைவா
ஏனிந்த
சதி.
நல்லெண்ணங்களே வாழ்க்கை,
நற்சிந்தனைகளே செயலென வாழ்ந்த
ராணியம்மா உங்கள் பிரிவு எங்களை
வாட்டி வதைக்கின்றதே என் செய்வோம்.
விழி வழிந்த கண்ணீர் காயவில்லை
அம்மா அதற்குள் மாதமொன்றானதோ?
தாயே உங்கள் ஆத்ம சாந்திக்காக
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி.
உங்கள் நீங்கா நினைவுகளுடன்.
கணவன்,பிள்ளைகள்,
மருமக்கள்,பேத்திகள்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இறைவன் திருவடியில் ஆறுதலடைய வேண்டுகின்றேன்🙏🙏🙏 ஓம் சாந்தி ஓம் சாந்தி🙏🙏 ராணி!என்று அழைப்போம் வாங்க அண்ணா என அழைப்பாய், என்னசாப்பிடுவோம் எனக்கேட்கும் குரலை எப்போ கேட்பேன்? ஆணால் தினம்...