

திதி:16/08/2025
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy யை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் தர்மகுலராணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்"
உங்கள் உயிரை காலனும்,உடலை தீயும்
தின்று முடித்து ஆண்டுகள் இரண்டானதோ!!!
ஆனாலும்
எங்களால் உங்கள் நினைவுகளையும்,
நிழலையும் மறக்க முடியவில்லையே..!
உங்கள் நினைவுகளால் கண்ணீர்
ஆறாய் பெருக்கெடுத்து கன்னமெனும்
வயல்களை நாள் தோறும் நனைக்கின்றதே!!
தரையினில் வாடி வீழ்ந்தாலும்
நல் வாசம் தரும் பூக்கள்,
அது போல
நீங்கள் மறைந்தாலும்
எங்கள்
மனங்களில் வாசம் தரும் பூவல்லவோ!!
செழுமையும்,வறுமையும் எமை
என்
செய்யும் செப்பனிடலே வாழ்க்கைத்
தத்துவம் என புகட்டியவர் நீங்களல்லவா!!
புகழ்தலையும்,இகழ்தலையும்
புறம் தள்ளி
புதிய பாதை வகுத்த
புதுமைப்
பெண் அல்லவா நீங்கள்!!!
வரமாய் கிடைத்த வாழ்க்கையை
வசந்தமாய் வாழ கற்றுத்தந்தவர் நீங்களல்லவா!!
காசு கிடைக்கும் போது சேமி என்பதை
விட
காலமெல்லாம் உறவுகளை சம்பாரி
என கருணையாய் சொன்னவர்
நீங்களல்லவா!!
அளவில்லா அன்பை தாராளமாக
அள்ளி
விதைக்கும் விந்தையை
கற்ப்பித்தவர்
நீங்களல்லவா!!
உலகில் அலை வந்து
மோதாத கரை
ஒன்றுமில்லை தினமும்
உங்களை நினைத்து
கண் கலங்காத நாளும் எமக்கில்லை.
நீங்களின்றி நாங்கள் இப்போ நடுக்கடலில்
நங்கூரமில்லா கப்பலாக
தத்தளிக்கின்றோம்
எமை கரை சேர்க்க
ஓடோடி வருவாயோ தாயே!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
உங்கள் நீங்கா நினைவுகளுடன் குடும்பத்தினர்..!
இறைவன் திருவடியில் ஆறுதலடைய வேண்டுகின்றேன்??? ஓம் சாந்தி ஓம் சாந்தி?? ராணி!என்று அழைப்போம் வாங்க அண்ணா என அழைப்பாய், என்னசாப்பிடுவோம் எனக்கேட்கும் குரலை எப்போ கேட்பேன்? ஆணால் தினம் தோறும்...