வவுனியாவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் நித்தியகுமரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
31நாட்கள் ஆகிவிட்டது அப்பா,
உங்களை இழந்து தவிக்கிறோம்
இத்தரணியில்...
பாசத்தின் பிறப்பிடமாய்,
பண்பின் உறவிடமாய்
எமக்காகவே வாழ்ந்தீர்...
நீங்கள் மறைந்தாலும்
உங்களது நினைவுகள்
என்றும் எம்முடன் பயணிக்கும்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
So sorry to hear your loss, Nimalan. I pray for his soul to rest in peace and equally pray for strength to you and your loved one to come through these difficult times. Please take care,