![](https://cdn.lankasririp.com/memorial/notice/216971/f4bfe791-e1de-411a-ba1f-c8fb7ce75a04/23-656e0bb8314f9.webp)
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் நித்தியகுமரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
”உன் நினைவு மறையுமோ!!”
நாட்கள் நகர்கின்றதா இல்லை பறக்கின்றதா!
எங்களை நிர்க்கதியாய் தவிக்கவிட்டு
எங்களின் உயிருக்குயிரானவனே
எங்களைப் பிரிந்து இரண்டு ஆண்டுகள் மறைந்ததையா
காலம் நகரலாம் கண்ணீரும் கவலையும்- என்
இதயத்திற்கு மட்டுமே சொந்தமாய் போனதையா
என்னுயிரே! ஏன் இந்த சுமை தந்தீர்?
என் உயிர் உள்ளவரை சோகத்தை....
ஏன் சுமக்கவைத்து விடைபெற்றீர்!
எத்தனை கதைகள்.. எத்தனை வசனங்கள்..
எல்லாம் நான் கேட்டும்- என்னுயிரே!
உமது ஆத்மா என்னோடு இணை நின்று
என்னை இயக்கிச் செல்வதால் தான்
உமது பிள்ளைகள் உமது விருப்பப்படி
தனியாக நான் வளர்த்து
தலை நிமிர்ந்து நிற்கின்றேன்...
இரவென்றும் பகலென்றும் சுழன்று நான் ஓடுகையில்
இணையாக என்னோடு நீர் நின்று இயக்குவதை
என் மனம் மட்டும் தான் உணர்ந்து இளைப்பாறும்
நித்தம் என்னோடு உன் ஆத்மா உரையாடுவதால்
நிமிர்ந்து நான் நின்று உன் பணியாற்றுகின்றேன்..!!
எங்கள் ஆசை அப்பாவே எங்கு சென்றீர்கள்!
அன்பான எங்கள் அன்பு அப்பா !
இறைவனிடம் நீங்கள் சென்று
ஈராண்டுகள் ஆகியதுவோ !
உங்களை இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது...
So sorry to hear your loss, Nimalan. I pray for his soul to rest in peace and equally pray for strength to you and your loved one to come through these difficult times. Please take care,