Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 17 OCT 1977
மறைவு 07 DEC 2022
திரு பாலசிங்கம் நித்தியகுமரன்
Mathu Food and Wine Owner
வயது 45
திரு பாலசிங்கம் நித்தியகுமரன் 1977 - 2022 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் நித்தியகுமரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
 உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...

 இரத்தத்தை வியர்வையாக்கி
அல்லும் பகலும் அயராது உழைத்து
 எங்கள் வாழ்விற்கு ஒளி கொடுத்த
எம் தெய்வமே...

 கைப்பிடித்த நாள் முதலாய்
கண்னை இமைகாப்பது போல்
 எம்மை காத்து வந்தீரே!

நினைக்கும் போது எல்லாம்
உங்கள் நினைவோடு வாடுகின்றேன்
 பெற்ற பிள்ளைகள் எங்கள் நல்வாழ்விற்காய்
 பெரும்பாடுபட்ட அன்பு அப்பாக கல்வியூட்டி
 வாழ வழிகாட்டி, வாழ வைத்தவரே

 உங்கள் ஒழுக்கம், நற்பண்புகள், மதிப்புக்கள்
எல்லாம் எங்கள் வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும் அப்பா
 மூன்றல்லா என்ன மூவாயிரம் கழிந்தாலும்
 உங்கள் பிரிவை எங்களால் தாங்கமுடியாது
 உங்கள் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: மனைவி- நிஷாந்தி, பிள்ளைகள்- துவாரகா, காவியா