வவுனியாவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் நித்தியகுமரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிங்கத்தின் கடைக்குட்டியே ....!!
அன்னையின்
கருவறையில்
பிந்தி
பிறந்தவனே !
குறோய்டன்
கல்லறைக்கு
எப்படி
முந்தி
சென்று,
மூர்ச்சையானாய்?
எதிர்த்து
எவரையும்
பேச மாட்டாய்
நீ !
அதனால் தானோ
காலன் உன்னை
கவர்ந்தபோதும்,
மௌனமாய்
மறைந்துவிட்டாய்?
பெருந்துயரை,
வெறுமையை,
இருளை,
ஏக்கத்தை
எங்களுக்கு
தானமாய்
தந்துவிட்டு..
எங்கள்
நிம்மதியை
நீ
களவாடி
சென்றாய் !
உழைப்பே
உன்
உலகு!
மௌனடும்
உன்
அழகு!
தனிமையே
உன்
தனி
சாம்ராஜ்யம்.
நல்லதோர்
வீணையை
மண்ணுக்குள்
மண்ணாக்கி
ஒப்பாரி
ஓலங்களை
எங்கள்
குடும்பமொழியாக்கி
விட்டோம்!
பேசும்
புல்லாங்குழலை
பெட்டிக்குள்
பூட்டி
புதைத்துவிட்டு,
அது.....
ஒரு நாள்
கானம்
தரும்என
காத்திருக்கின்றோம்!
பூரணை
புன்னகை
பூத்தவனே!
இன்று.....
அமாவாசை
தேசத்திற்கு
எங்களை
அரசனாக்கி
சென்றுவிட்டாயே!!
ஆறடி
அழகே!
புன்சிரிப்பு
புதையலே!
நேர்வழி
நிமிர்
நேத்திரமே!
நீ
எப்படி
வெட்டி எடுத்த
விதைகுழியை
உன்
விலாசமாக்கினாய்?
நெருப்பு
உன்
அழகை
எரிக்க
நிராகரிக்கும்
என்பதால்,
உன்னை
விதைக்க
விரும்பினோம்.
ஒரு
விருட்சமாகவேனும்
விழி
திறந்திடு
எங்கள்
வெளிச்சமே!
சிங்கத்தின்
கடைக்குட்டியே!
புலியின்
போர் வாளே!!
புயலின்
போக்கே!
எந்த
நஞ்சு
உன்னை
நிராயுதபாணி
ஆக்கியது?
உயிர்தெழுதல்
உனக்கும்
எனக்குமானதல்ல!
அது......
கடவுளின்
கண்ணாமூச்சி!!
மறுபடி
ஒருமுறை
நீ
உதித்தால்...
மாங்குள
மண்ணில்...
ஆட்டுகுட்டிகளுக்கு
பவுடர் பூசவும்,
ஒன்றாக நாங்கள்
ஓணான் துரத்தவும்,
மான் வளர்க்கவும்,
மாடுகள் சாய்க்கவும்,
வயல்வெளிகளில்
ஓடித்திரியவும்,
மரநிழல்களில்
ஓய்வெடுக்கவும்,
காட்டில்
தொலையவும்,
நம் ஊர்
காற்றில்
கலக்கவும்,
எம்மோடு
வந்துவிடு
நித்தி...!!!
So sorry to hear your loss, Nimalan. I pray for his soul to rest in peace and equally pray for strength to you and your loved one to come through these difficult times. Please take care,