Clicky

பிறப்பு 23 MAR 1974
இறப்பு 17 JAN 2021
அமரர் அருணாசலம் சிதம்பரநாதன்
வயது 46
அமரர் அருணாசலம் சிதம்பரநாதன் 1974 - 2021 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arunasalam Sithamparanathan
1974 - 2021

அன்புள்ள அருண், ஊரிழந்து உறவிழந்து நாடு விட்டு நாடு வந்து - இங்கு நாம் புது உறவு கண்டோம் நட்பையும் தாண்டியது நம் உறவென நாழிகையும் நம்பியிருந்தோம் உன் புன்னகையால் நம் எல்லோரையும் கட்டிப்போட்டாய் உபசரிப்பால் நீ உயர்ந்து நின்றாய் பக்கத்துப் பையன் மகேஸ் போத்திலுடன் காத்திருக்க பக்கையாவும் பாட்டிக்கு எப்போதும் தயாராயிருக்க கந்தப்புவும் கிருபாவும் காலமெல்லாம் வருவோமென கங்கணம் கட்டி நிற்க நீ மட்டும் தனியாக சொல்லாமல் சென்று விட்டாய் நம் ஐவரில் இளையோனே - நீ முதற் போக நினைத்தது ஏனோ? புரியாமல் தவிக்கின்றோம் - தினம் கண்ணீரில் மிதக்கின்றோம் வழியனுப்பவும் முடியாமல் இன்னும் விழி பிதுங்கி நிற்கின்றோம் எம்மினிய நண்பனே! இவ்வுலகில் நாமருக்கும் இறுதி நாழிகை வரை உன் நினைவில் எப்போதும் நாம் இருப்போம்.

Write Tribute