Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 MAR 1974
இறப்பு 17 JAN 2021
அமரர் அருணாசலம் சிதம்பரநாதன்
வயது 46
அமரர் அருணாசலம் சிதம்பரநாதன் 1974 - 2021 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 71 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் சிதம்பரநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 23-01-2026

ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா
என அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!

கனகாலம் எம்மோடு கரிசனையாய்
வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கதி கலங்க வைத்ததப்பா!

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!

என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால்
அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்த் துளிகளைக் காணிக்கையாக்குகின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices